Ingen E-Learning Solutions Pvt. Ltd.


Clock Widgets

எழில் கொஞ்சும் ஏலகிரி

தமிழ் நாட்டில் உள்ள முக்கிய மலை வாழிடங்களில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரி மலையும் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் வருடம் முழுவதும் குளுமையான சூழலைக் கொண்டுள்ளது.

அமைவிடம் : திருப்பதூர் தாலுகா. ஜோலார்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் - வாணியம்பாடியிலிருந்து 23 கிலோமீட்டர் - திருப்பத்தூரிலிருந்து 26 கிலோமீட்டர்.

வழி : வாணியம்பாடி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் உள்ளது பொன்னேரி கிராமம். இந்த ஊர்தான் ஏலகிரி மலையின் அடிவாரம். இங்கிருந்து 1.5 கிலோமீட்டர் தூரம் சென்றவுடன் மலைப் பாதை துவங்கும்.

மலைப்பாதை : 14 கொண்டை ஊசி வளைவுகள் உங்களை மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். ஒவ்வொரு வளைவிற்கும் தமிழ் மன்னர்களின் பெயர்களை வைத்துள்ளது சிறப்பு. 7 வது வளைவிலிருந்து அழகிய சுற்றுப்புறக் காட்சிகளையும், வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரங்களின் எழில் மிகு தோற்றங்களையும் கண்டு மகிழலாம். 13 வது வளைவில் தொலைநோக்கி மையம் ஒன்று வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள் : புங்கனூர் படகுத் துறை, நிலாவூர் படகுத் துறை, மூலிகைப் பண்ணை, சிறுவர் பூங்கா ஆகியவை பயணிகளைக் கவரும் சில முக்கிய இடங்கள். மாலை வேளையில் குளுமையான சூழலில் காலாற சுற்றி வருவது மிகவும் இனிமையான அனுபவம்.

பயணிகளின் வசதிக்கென்றே பல உணவு விடுதிகளும், தங்குமிடங்களும் உள்ளன. மலைக்கு சென்று திரும்ப அரசுப் பேருந்துகளும், வேன் மற்றும் ஆட்டோக்களும் உள்ளன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாழிடங்களுடன் ஒப்பிடும்போது குறைவான செலவில் நிறைவான அனுபவத்தைத்தரும் ஏலகிரி மலைக்கு இன்றே சென்று இயற்கை எழிலை அனுபவியுங்கள்.

மலையில் தங்க அணுகுங்கள்
ஆர்கிட் ஹௌஸ்
ஸ்ரீதரன் - போன் : 94868 50051
அதனாவூர் - நிலாவூர் சாலை
நிலாவூர்















தெரிந்துகொள்வோம்

வானம் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது?

சூரியனிலிருந்து வரும் ஒளியில் அனைத்து நிறங்களும் உள்ளன. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலை நீளம் உண்டு. அலை நீளம் குறைவாக உள்ள ஒளி, ஊடகத்தினால் அதிகமாக சிதரடிக்கப்படுகிறது. அலை நீளம் அதிகமாக உள்ள ஒளி, ஊடகத்தினால் குறைவாக சிதரடிக்கப்படுகிறது.

நமது பூமியை சுற்றி உள்ள வளிமண்டலம் ஒரு ஊடகமாக செயல்பட்டு சூரியனிலிருந்து வரும் ஒளி கற்றைகளை தடுக்கிறது. அப்படி தடுக்கப் படும் பொழுது அலை நீளம் குறைவாக உள்ள ஒளி அதிக அளவு சிதறடிக்கப் படுகிறது. நீல நிறம் மறற நிறங்களை விட குறைவான அலை நீளம் கொண்டது. ஆகையால் இந்த நிறம் அதிக அளவு சிதறடிக்கப் படுகிறது. சிதறடிக்கப்படும் ஒளி வளிமண்டலத்திலேயே தங்கி விடுவதால் வானம் நீல நிறமாக காட்சி அளிக்கிறது.
நீல நிறம் தவிர்த்த மற்ற நிறங்கள் நம்மை வந்தடைவதால் சூரியன் மஞ்சள் நிறமாக காட்சிதருகிறது.
மீண்டும் சந்திப்போம்---- இ. மருதன்

Followers

free hit counter codes