வானம் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது?
சூரியனிலிருந்து வரும் ஒளியில் அனைத்து நிறங்களும் உள்ளன. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலை நீளம் உண்டு. அலை நீளம் குறைவாக உள்ள ஒளி, ஊடகத்தினால் அதிகமாக சிதரடிக்கப்படுகிறது. அலை நீளம் அதிகமாக உள்ள ஒளி, ஊடகத்தினால் குறைவாக சிதரடிக்கப்படுகிறது.
நமது பூமியை சுற்றி உள்ள வளிமண்டலம் ஒரு ஊடகமாக செயல்பட்டு சூரியனிலிருந்து வரும் ஒளி கற்றைகளை தடுக்கிறது. அப்படி தடுக்கப் படும் பொழுது அலை நீளம் குறைவாக உள்ள ஒளி அதிக அளவு சிதறடிக்கப் படுகிறது. நீல நிறம் மறற நிறங்களை விட குறைவான அலை நீளம் கொண்டது. ஆகையால் இந்த நிறம் அதிக அளவு சிதறடிக்கப் படுகிறது. சிதறடிக்கப்படும் ஒளி வளிமண்டலத்திலேயே தங்கி விடுவதால் வானம் நீல நிறமாக காட்சி அளிக்கிறது.
நீல நிறம் தவிர்த்த மற்ற நிறங்கள் நம்மை வந்தடைவதால் சூரியன் மஞ்சள் நிறமாக காட்சிதருகிறது.
மீண்டும் சந்திப்போம்---- இ. மருதன்